நெல்லை, நவ.15:

வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை பொறியியல் துறை மூலமாக நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடை பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படுகிறது.

விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் உழவு கருவிக்கான ரோட்டா வேட்டர், கலப்பை (5 கொழு மற்றும் 9 கொழு) வரப்பு செதுக்கி சேறு பூசும் கருவி போன்ற கருவிகள் உழுவை எந்திரத்துடன் 1 மணி நேரத்திற்கு ரூ.400 வாடகையிலும், நெல் அறுவடை எந்திரம் (டயர் வகை) 1 மணி நேரத்திற்கு ரூ.1,010-ம், ரப்பர் டிராக் வகை அறுவடை எந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.1,630-ம், சோளம் அறுக்கும் கருவி டிராக்டருடன் 1 மணி நேரத்திற்கு ரூ.400-ம், தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்கும் கருவி 1 மணி நேரத்திற்கு ரூ.650 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நிலத்தினை சமன்படுத்திட புல்டோசர் 1 மணி நேரத்திற்கு ரூ.970-ம், மண் அள்ளும் கருவி (பொக்லைன்) 1 மணி நேரத்திற்கு ரூ.1,650-ம், மண் அள்ளும் கருவி (ஜே.சி.பி.வகை) மணிக்கு ரூ.760 என்ற வாடகையிலும் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களில் வாடகை முன்பணம் செலுத்தி முன்னுரிமை அடிப்படைகளில் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதன்படி பாளையங்கோட்டை, மானூர் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் ஜெயராமை டிராக்டர் வீதி, என்.ஜி.ஓ. ஏ. காலனி, நெல்லை என்ற முகவரியில் உள்ள அலுவலகத்திலும், 9952527623 என்ற செல்போன் எண்ணிலும், அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, முக்கூடல், நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் வள்ளியூர் வட்டார பகுதி விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணனை மிளகு பிள்ளையார் கோவில் தெரு, பஸ் நிலையம் அருகில், சேரன்மாதேவி என்ற முகவரி அலுவலகத்திலும், 9600159870 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு செயற்பொறியாளர் ஜாகீர் உசேனை திருநகர், ரெட்டியார்பட்டி ரோடு, நெல்லை என்ற முகவரி அலுவலகத்திலும், 9443694245 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளாலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.inhttps://www.tnagrisnet.tn.gov.in,