தென்காசி,  நவ.26:

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதிகளில் மாணவ/மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தென்காசி மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நலபள்ளி மாணவர் விடுதிகளும், 10 ஆதிதிராவிடர் நலபள்ளி மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நலகல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நலகல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி விடுதியும் ஆகமொத்தம் 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும் இலவசமாக 4 இணைச் சீருடைகளும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். 
இவ்விடுதிகளில் சேருவதற்கு மாணவ/மாணவியர்களின் பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/க்குமிகாமல் இருக்கவேண்டும்.

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவ /மாணவியரகளுக்கு விடுதியில் சோக்கைக்கு அனுமதிக்கப்படும். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும் பள்ளிக்கும் இடைவெளி 5-கி.மீ க்கு மேல் இருக்கவேண்டும்.   மாணவியர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

பள்ளி/கல்லூரி மாணவ/மாணவியர்கள் தாங்கள் சேர விரும்பும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடம் 07.12.2021 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்கவேண்டும். பள்ளி கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமப்பிக்கவேண்டும். 

மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர் / மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today