தென்காசி,  ஆக.9:

திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்த பணிகளும் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை நன்செய் நிலங்களில் வழியே செல்ல இருப்பதால் மாற்று வழியில் விவசாயிகளை பாதிக்காத அளவில் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். தாங்கள் வெற்றி பெற்றால் மாற்று வழியில் சாலை அமைக்கப்படும் என திமுக கூட்டணி கட்சியினர் அறிவித்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டதை அடுத்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் .
பழைய வழித்தடத்திலேயே சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை  744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றியமைப்பு சங்க தலைவர் கோ. மாடசாமி, செயலளர் சரவணக்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, அச்சன்புதூர் மீரான்கனி, வடகரை சாகுல் ஹமீது, ரிசவ்மைதீன், புகாரி, முகமது உசேன்,அசன் உசேன்,கடையநல்லூர் பாதுஷா, அப்துல் உசேன்,சாகுல் ஹமீது,விசுவநாதபேரி அய்யாசாமி, ரங்கராஜ், விஐயகுமார், குருபிரசாத்,
வாசுதேவநல்லூர் கணேசன், ஆவுடையப்பன்,சக்திமுருகன், ராஜபாண்டி, சம்சுதின், திருவெட்டநல்லுர் கோபாலசாமி, ராமசந்திரன், சிந்தாமணி குமர் ஆகியோர் மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இதுகுறித்து கனிமொழி எம்பி, தனுஷ் குமார் எம்பி, டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ, தென்காசி மாவட்ட  திமுக செயலாளர்கள் தெற்கு சிவபத்மநாதன், வடக்கு  செல்லத்துரை ஆகியோரிடமும் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவை சங்க நிர்வாகிகள் சந்தித்து மாற்று வழியில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பது குறித்து விளக்கிக் கூறினர். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  
இதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலை நன்செய் நிலங்களில் வழியாக அமைக்கப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்படாத அளவில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today