தென்காசி, சூலை 19-
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை குறைத்திட வேண்டும். அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். உள் ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் தொடரும் சாதிய படுகொலைகளை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் தமிழ் முருகன், முத்தையா, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தொடக்க உரை நிகழ்த்தினார். மாநில அமைப்பு செயலாளர் திலீபன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, மாரிமுத்து, தங்கம், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளையராஜா நன்றி கூறினார்.
நிருபர் நெல்லை டுடே