தென்காசி, செப்.1- தென்காசி மாவட்டத்தில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 402 வாக்காளர்கள் உள்ளனர்
தென்காசி மாவட்டத்தில்  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும்   வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்;;  3,69,439 ஆண் வாக்காளர்கள், 3,85,939 பெண் வாக்காளர்கள், 24 மூன்றாம் பாலினத்தவர் என மொத்த வாக்காளர்கள் 7,55,402 உள்ளனர்;. மேலும் தென்காசி மாவட்டத்தில் 1905 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 221 ஊராட்சி மன்றத்தலைவர்கள்,  144  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 1328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் நெல்லை டுடே.
https://www.nellai.today/