நெல்லை ,  ஆக.7:

முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 70.36 சதவீத வாக்குகளும், தென்காசி மாவட்டத்தில் 73.95 சதவீத வாக்குகளும் பதிவானது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில்முதல்கட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 612 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1 லட்சத்து 69 ஆயிரத்து 842 பேர். பெண்கள் 1 லட்சத்து ‌78 ஆயிரத்து 719 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 51 பேர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.

காலை 9 மணி நிலவரப்படி அம்பை யூனியனில் 7.72 சதவீதமும், பாளையங்கோட்டை யூனியனில் 9.55 சதவீதமும், பாப்பாக்குடி யூனியனில் 11.88 சதவீதமும், மானூர் யூனியனில் 10.34 சதவீதமும், சேரன்மாதேவி யூனியனில் 7.57 சதவீதமும் வாக்குப்பதிவானது.

பகல் 11 மணி நிலவரப்படி அம்பை யூனியனில் 13.50 சதவீதமும், பாளையங்கோட்டை யூனியனில் 26.59 சதவீதமும், பாப்பாக்குடி யூனியனில் 24.81 சதவீதமும், மானூர் யூனியனில் 24.09 சதவீதமும், சேரன்மாதேவி யூனியனில் 21.96 சதவீதமும் வாக்கு பதிவானது.

மதியம் 1 மணி நிலவரப்படி அம்பை யூனியனில் 37.25 சதவீதமும், பாளையங்கோட்டை யூனியனில் 39.47 சதவீதமும், பாப்பாக்குடி யூனியனில் 41.10 சதவீதமும், மானூர் யூனியனில் 39.65 சதவீதமும், சேரன்மாதேவி யூனியனில் 34.99 சதவீதமும் வாக்குப்பதிவானது

மாலை 3 மணி நிலவரப்படி அம்பை யூனியனில் 50.62 சதவீதமும், பாளையங்கோட்டை யூனியனில் 50.60 சதவீதமும், பாப்பாக்குடி யூனியனில் 56.18 சதவீதமும், மானூர் யூனியனில் 52.97 சதவீதமும், சேரன்மாதேவி யூனியனில் 52.55 சதவீதமும் வாக்குப்பதிவானது.

சேரன்மாதேவி யூனியனில் பதிவான மொத்த வாக்குகள்:-

ஆண்கள் 10 ஆயிரத்து 161, பெண்கள் 10 ஆயிரத்து 943. மொத்தம் ‌21 ஆயிரத்து 104. இது 74.76 சதவீதமாகும்.

அம்பை யூனியனில் பதிவான மொத்த வாக்குகள்:- 

ஆண்கள் 15 ஆயிரத்து 726, பெண்கள் 17 ஆயிரத்து 210. மொத்தம் 32 ஆயிரத்து 936. இது 67.08 சதவீதமாகும்.

பாப்பாக்குடி யூனியனில் பதிவான மொத்த வாக்குகள்:-

ஆண்கள் 16 ஆயிரத்து 18, பெண்கள் 16 ஆயிரத்து 862. மொத்தம் 32 ஆயிரத்து 880. இது 72.63 சதவீதமாகும்.

பாளையங்கோட்டை யூனியனில் பதிவான மொத்த வாக்குகள்:-

ஆண்கள் 32 ஆயிரத்து 156, பெண்கள் 32 ஆயிரத்து 813. மொத்தம் 64 ஆயிரத்து 969. இது 67.57 சதவீதமாகும்.

மானூர் யூனியனில் பதிவான மொத்த வாக்குகள்:-

ஆண்கள் 44 ஆயிரத்து 628, பெண்கள் 49 ஆயிரத்து 292, மூன்றாம் பாலினத்தவர்கள் 24, மொத்தம் 94 ஆயிரத்து 143.‌ இது 71 சதவீதமாகும்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 282 வாக்காளர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். 70.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இறுதி நிலவரமாக ஆலங்குளம் யூனியனில் 75.15 சதவீதமும், கடையம் யூனியனில் 71.87 சதவீதமும், கீழப்பாவூர் யூனியனில் 75.24 சதவீதமும், மேலநீலிதநல்லூர் யூனியனில் 74.64 சதவீதமும், வாசுதேவநல்லூர் யூனியனில் 71.59 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 951 பேர் வாக்களித்து உள்ளனர். 73.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/