நெல்லை, ஆக.31- மானூரில் ரூ.7 கோடியே 80 லட்சம் செலவில் போலீசாருக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். பின்னர் புதிய கட்டிடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் குத்துவிளக்கு ஏற்றினார்.

விழாவில் தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெருமாள்,  செயற்பொறியாளர் ஜெகநாதன், இளநிலை பொறியாளர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/