தென்காசி, ஆக. 14:

தென்காசி மாவட்டத்தில் மீன் குளம் அமைத்து மீன் வளர்க்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில்; மீன்வளர்ப்பினை விரிவுபடுத்திட மற்றும் மீன்குஞ்சு உற்பத்தியினை அதிகரித்திட புதிய குளம் அமைத்து உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தின்கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் ஒரு ஹெக்டேரில் ரூ.7.00 இலட்சம் செலவு செய்து மீன்குளம் அமைத்திட 50% மானியமாக ரூ.3.50 இலட்சம் மற்றும் ஒரு ஹெக்டேர் நீர்ப்பரப்பில் மீன்வளர்ப்பு செய்திட ஆகும்.

உள்ளீட்டு செலவினங்களுக்கு (மீன்குஞ்சு, மீன்தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு) ரூ.1.50 இலட்சத்தில் 40 சதவிகிதமாக ரூ.60,000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு சொந்தநிலம் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருத்தல் வேண்டும். மீன்வளர்ப்பு அல்லது மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவத்தை  www.tenkasi.nic.in/forms/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 42C, 26 வது குறுக்குத்தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி – 627011  என்ற அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 0462 2581488 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today