தென்காசி,  சூன் 28 –

சங்கரன்கோவில்  அருகே   பைக் மீது வேன் மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மணலூர் கிராமம் இந்திரா காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகராஜ் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அனுசுயாதேவி. இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

புதுமாப்பிள்ளையான முருகராஜ்  மணலூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பைக்கில்  ராஜபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

சங்கரன்கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 

நிருபர் நெல்லை டுடே