Month: October 2021

கடையம் சார் பதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை!

தென்காசி, அக்.30: கடையம் சார் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று  திடீர்  சோதனை நடத்தினர். இதில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் சிக்கியது. தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின்சன்,சப்இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்பட 7 பேர் அடங்கிய போலீசர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரை வெகுநேரம் நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. https://www.tenkasi.nic.in, https://www.dvac.tn.gov.in செய்தி நிருபர் நெல்லை டுடேhttps://www.nellai.today

தென்காசியில் மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் முகாம்!

தென்காசி,  அக் .30: தென்காசியில்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும்,  திருவனந்தபுரம் கிம்ஸ், மருத்துவமனையும் இணைந்து நடத்திய மார்பகபுற்று நோய்க் கருத்தரங்கம் மற்றும் மார்பகபுற்று நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் சார்பில் தென்காசி மாவட்ட அரசு தலைமை…

தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடப் பணிகள் நிறைவு!

தென்காசி, அக்.30: தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் திறப்புவிழா காண்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது எனவே விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.என பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.…

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

தென்காசி,  அக்.30: மானாவாரி பயிர்கள், பூ, தேங்காய்களுக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் என தென்காசி மாவட்ட விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…

காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் புதிய வகுப்பறை திறப்பு விழா!

தென்காசி,  அக்.29: தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் ரூ.2 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா  நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து…

ரூ.1கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கல்!

தென்காசி,  அக்.29: தென்காசியில் 276 பேருக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்கு…

அரசு ஐடிஐ களில் நவ.2ல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

தென்காசி, அக். 28: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தென்காசி மாவட்ட அளவில் தென்காசியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 02.11.2021 அன்று காலை 9 மணி முதல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.  மத்திய, மாநில…

புளியங்குடியில் மரக்கடையில் தீ விபத்து ரூ.70 லட்சம் கட்டை!

தென்காசி,  அக்.28: புளியங்குடியில் மரக்கடையில் தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான கட்டைகள் எரிந்து சேதம் அடைந்தன. தென்காசி மாவட்டம் புளியங்குடி பாலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துசரவணன் (வயது 40). இவரது உறவினர் அழகுகிருஷ்ணன் (28). இவர் விஸ்வ…

நெல்லையில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

நெல்லை, அக். 28: நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களின் ஊதிய முரண்பாட்டை களையவேண்டும்.…

கடையம் பொதுமக்களிடம் குறைகளை கேட்ட ஆலங்குளம் எம்.எல்.ஏ!

தென்காசி,  அக்.27: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று நிறைவேற்றி வருகிறார். கடையம் யூனியன் வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.  அப்போது மனோஜ்…