Month: August 2021

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு புளியரையில் சோதனை தீவிரம்!.

தென்காசி, ஆக. 31-கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதால், தமிழக…

நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்திட 13 சிறப்பு குழுக்கள்: ஆட்சியர்!.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்திட 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வு குழுவினர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட…

மானூரில் ரூ.7.80 கோடியில் காவலருக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு!.

நெல்லை, ஆக.31- மானூரில் ரூ.7 கோடியே 80 லட்சம் செலவில் போலீசாருக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சியில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார். பின்னர் புதிய கட்டிடத்தில் மாவட்ட…

பைக் மீது வேன் மோதல் 2 பொறியாளர்கள் பலி.

தென்காசி, ஆக. 30- திருவேங்கடம் அருகே பைக் மீது வேன் மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு பொறியாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி பஞ்சாயத்து பிள்ளையார்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது…

புளியரை சோதனை சாவடியில்கண்காணிப்பு தீவிரம்!

தென்காசி, ஆக. 30- கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கேரள-தமிழக எல்லைப்பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு…

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற்றுக் கொள்ளலாம்: தென்காசி ஆட்சியர்!

தென்காசி, ஆக. 30- முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் முதிர்வு தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- முதலமைச்சரின் பெண்…

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு நெல்லை ஆட்சியர் பாராட்டு.

நெல்லை, ஆக. 25: நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வழங்கினார்.நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.…

சிவகிரி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு!.

தென்காசி, ஆக. 25: சிவகிரி தாலுகா பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர்  ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் ரத்தினபுரி மங்கம்மாள் சாலையில் உள்ள சிறுகுளம், துலுவன் குளம், வெள்ளானைக்கோட்டை பெரிய குளம் ஆகிய…

திறன்மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தென்காசி ஆட்சியர்!.

தென்காசி, ஆக. 25: திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…

செங்கோட்டையில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்.

தென்காசி, ஆக.25: செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற சபாநாயகராக தாலுகா உதவி செயலாளர் சுந்தர் இருந்தார்.  ஆளுங்கட்சி அமைச்சர்களாக தாலுகா உதவி செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் சுப்பிரமணி, எதிர்க்கட்சி சார்பாக தாலுகா செயலாளர் மாரியப்பன் ஆகியோர். கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் தேன்பொத்தை கிளை செயலாளர் செல்லையா, ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க தலைவர் உலகநாதன், செயலாளர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நிருபர் நெல்லை டுடே https://www.nellai.today