Month: July 2021

தென்காசி அரசு மருத்துவமனை முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு !

 தென்காசி, சூலை 31: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் பணிபுரிந்த மற்றும் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது,இந்த பாராட்டு விழாவிற்கு சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் நெடுமாறன் தலைமை தாங்கினார்.  உறைவிட மருத்துவர்…

சர்வதேச புலிகள் தினம் வனப்பகுதியில் 7000  பூமிபந்து ‌வீச்சு.

 தென்காசி, சூலை 31:தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியிலும், செங்கானுர் கிராமத்திலும் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு 7000 பூமிபந்துகள் வீசும் நிகழ்வு நடைபெற்றது. கோதண்டராமபுரம் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் மற்றும் பாட்டப்பத்து  டால்பின் வாழ்வியல் அமைப்பு, தென்காசி…

தென்காசியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம்.

தென்காசி, சூலை 31: தென்காசியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் எளிதில் அணுக மாவட்ட தொழில் மைய அலுவலகம் தற்போது தென்காசியிலேயே செயல்படுகிறது. தென்காசி மாவட்டத்தை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்,…

தென்காசி அரசு  மருத்துவமனை இணை இயக்குனர் வெங்கட்ரங்கன் பதவியேற்பு.

 தென்காசி, சூலை 31:தென்காசி மாவட்ட இணை இயக்குனர் (நலப்பணிகள்)மருத்துவர் வெங்கட்ரங்கன்  பதவியேற்றுக்கொண்டார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது மருத்துவர்கள் ,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.புதிய இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கனுக்கு,…

கொரோனா 3-வது அலை சிகிச்சைக்கு நெல்லை அரசு மருத்துவமனை தயார். அமைச்சர் தங்கம் தென்னரசு

நெல்லை, சூலை, 31: கொரோனா 3-வது அலை வந்தால் அதனை எதிர்கொண்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள…

நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி  போட அலைமோதிய மக்கள் கூட்டம்.

 நெல்லை, சூலை 30: நெல்லை மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளில்  மக்கள் கூட்டம் அலைமோதியது.   நெல்லை மாவட்டத்தில் கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 2-வது தவணை போடுவதற்கான காலக்கெடுவான 28 நாட்களை கடந்தும் தடுப்பூசி போட முடியாமல் தவித்து…

நெல்லையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்.

நெல்லை, சூலை 29: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் விக்னேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் அய்யப்ப குலசேகர ஆழ்வார், பொருளாளர்…

பி.எஸ்.என்.எல்  ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்.

நெல்லை,  சூலை 29: நெல்லை ஸ்ரீபுரம் பிஎஸ் என்எல் அலுவலகத்தில்   பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில்  ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சூசை அந்தோணி தலைமை தாங்கினார்.  பொறியாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மணிகண்டராஜ் முன்னிலை வகித்தார்.…

பான்பராக், குட்காவுக்கு நாடு முழுவதும்  தடைவிதிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்.

தென்காசி, சூலை 28: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் குத்துவிளக்கு ஏற்றினார். தமிழ்நாடு வணிகர்…

சங்கரன்கோவிலில் நகைக்கடை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்.

தென்காசி, சூலை 28: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய சட்டமான எச்.யூ.ஐ.டி. சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் ஒரு நாள் கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நேற்று நடந்தது.  இதையொட்டி…