Month: June 2021

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. தென்காசி ஆட்சியர் உத்தரவு

தென்காசி, சூன் 30-தென்காசி ஆட்சித்தலைவர் உத்தரவுபடி, சங்கரன்கோவில் பகுதியில் தொடர் குற்ற செயல்களில்  ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் சங்கரன்கோவில் நகர் ,நெடுங்குளம் வடக்கு காலனியைச் சேர்ந்த…

பிசி, ஓபிசி னருக்கு சிறப்பு கடன் திட்டம்.தென்காசி ஆட்சியர் தகவல்

தென்காசி, சூன் 30 -தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்காசி மாவட்டத்தில்…

தென்காசி மாவட்டத்தில் போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது.

தென்காசி, சூன்: 29- தென்காசி மாவட்டத்தில்போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் சின்ன கோவிலாங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அசோகன் (வயது 27). டீக்கடை தொழிலாளியான இவர்  மதுபோதையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம்…

செங்கோட்டை குண்டாறு அணை, அருவிகளுக்கு செல்ல தடை: போலீஸ் கண்காணிப்பு

தென்காசி, சூன்: 29-  தென்காசி  மாவட்டம்செங்கோட்டை குண்டாறு அணை, அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையை ஒட்டி அமைந்துள்ள பல அருவிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அருவிகளில் இருந்து…

கடையத்தில் பாரதியாருக்கு வெண்கல சிலை -சபாநாயகர் அப்பாவு உறுதி

தென்காசி, சூன் 27 – கடையத்தில் பாரதியாருக்கு வெண்கல சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சபாநாயகர் மு.அப்பாவு பேசினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார்-செல்லம்மாள் தம்பதியரின் 124-வது ஆண்டு திருமண நாள் விழா, தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் …

சங்கரன்கோவில்அருகே பைக் வேன் மோதல். புது மாப்பிள்ளை பலி.

தென்காசி,  சூன் 28 – சங்கரன்கோவில்  அருகே   பைக் மீது வேன் மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மணலூர் கிராமம் இந்திரா காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் முருகராஜ் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரது…

தென்காசி மாவட்டத்தில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ. 4,000 வழங்கல்: ஆட்சியர், எம்பி , எம்எல்ஏ பங்கேற்பு

  தென்காசி, ஜூன் 27 – தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் கலையரங்கத்தில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழுள்ள திருக்கோயில்களில் பணியாற்றும்…

செங்கோட்டை, புளியரையில்போராட்டம் நடத்திய இளம்பெண் மீது வழக்கு

தென்காசி, சூன் 26-செங்கோட்டை புளியரையில் போராட்டம் நடத்திய இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியதாக, புளியரை…

செங்கோட்டையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா

தென்காசி, சூன் 25-தென்காசி மாவட்டம்  செங்கோட்டை நகராட்சி பகுதியில் மேல அரசாழ்வார் தெருவில் (5-வது வார்டு) 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் நித்தியா, சுகாதார அலுவலர்…

தென்காசி தொகுதிவளர்ச்சிக்காக அமைச்சர்களிடம் பழனி நாடார் எம்எல்ஏ மனு

தென்காசி,  சூன் 24 -தென்காசி தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சர்களை பழனி நாடார் எம்எல்ஏ நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து ராமநதி – ஜம்புநதி மேல்மட்ட கால்வாய்…