தென்காசி, நவ.15:


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் கருப்பாநதி நீர்த்தேக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 20 ஆயிரம் பூமி பந்து ‌வீசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு வனத்துறை பாராட்டு தெரிவித்தனர். 

தமிழ்நாடு வனத்துறை – கடையநல்லூர் வனச்சரகம், பாட்டப்பத்து டால்பின் வாழ்வியல் அமைப்பு மற்றும் கோதண்டராமபுரம் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் சார்பாக பூமி பந்துகள் தயாரித்து வனப்பகுதியில் வீசப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு  டால்பின் வாழ்வியல் அமைப்பு மற்றும் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ச.சுரேஷ் தலைமை தாங்கினார். கடையநல்லூர் வனவர்  அம்பலவாணன் மற்றும் மனோஜ் பிரபாகரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். வனகாப்பாளர் பத்மாவதி  வரவேற்று பேசினார்.

அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கடையநல்லூர் வனச்சரக‌அலுவலர் த. சுரேஷ்  கருத்துரை வழங்கி பூமி பந்துகள் வீசும் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ‌தென்பொதிகை தமிழ் சங்க செயலாளர் துரைமுருகன் கடையநல்லூர் வனகாப்பாளர் திரு.ரத்தினம் மற்றும் சுரேஷ் ஆகியோர் பூமிப்பந்துகள் குறித்து கருத்துரை வழங்கினார்கள்  டால்பின் வாழ்வியல் அமைப்புசரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் அமைப்பினர் பூமி பந்துகள் தயாரித்து அதிக அளவில் மரங்கள் வளர்க்கும் நோக்கில் பருவமழை காலங்களில் மரம் வளர்ப்பு பகுதியில் வீசி வருகின்றனர் . 

கடையநல்லூர் வனச்சரக வனப்பகுதியில் பூவரசு,வாகை, மஞ்சள் கொன்றை, செங்கொன்றை, மயில் கொன்றை, புளி, நாவல்,புங்கை, செண்பகம், மருதம்,சூபாபுல், மஞ்சகடம்பு, வேம்பு, இலுப்பை உள்ளிட்ட 20000 பூமி பந்துகள் வீசப்பட்டன. இந்நிகழ்ச்சியில் டால்பின் வாழ்வியல் அமைப்பினர் , முருகேஷ், கார்த்திக் ராஜா, மாதவன், பொன்ராஜ், கார்த்திக், இசக்கிமுத்து, இஷாந்த், முரளி மற்றும் வன வேட்டை தடுப்பு காவலர்கள் மாடசாமி, செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வனப்பகுதியில் பூமிப்பந்துகளை வீசினர். முடிவில் வனகாவலர் மாதுரி பானு  நன்றி கூறினார். https://www.forests.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today