தென்காசி,  அக்.6:

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என்று  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ் கூறினார்.


இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

மாநில எல்லைப் பகுதியில் 2 சோதனை சாவடிகளும், மாவட்ட எல்லையில் 7 சோதனை சாவடிகளும், இதுதவிர மாவட்டத்திற்குள் ஆங்காங்கே 25 இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த சோதனை சாவடிகளில் உள்ள போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபடுவார்கள். இதுதவிர ரோந்து போலீசார் பணியில் உள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் நடைபெறும் யூனியன் பகுதிகளில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் பொதுமக்களுக்கு இடையூறின்றி நடைபெற மாவட்ட போலீஸ் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். கள்ள ஓட்டு போடுபவர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் தகராறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். https://www.elections.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/