தென்காசி, நவ. 25:

தென்காசி மாவட்ட ஊராட்சியின் முதல் கூட்டம். தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சியின் துணை தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன் , ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கனிமொழி பேசுகையில் மாவட்ட ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய மாநில அரசுகளின் நிதி ஆதாரம் தேவையாக உள்ளது. மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் பல் வேறு துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ள உதவி இயக்குநர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். உதவி இயக்குநரும் அதுகுறித்து ஆலோசனை செய்வதாக தெரிவித்தார்.

உறுப்பினர் சாக்ரடீஸ் பேசுகையில் , குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் . மேலும் குற்றாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதுடன் மேம்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 

மாவட்ட ஊராட்சியின் துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன் பேசும்போது, தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் அரசு சார்ந்த மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் அதிகாரிகள் உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும். தென்காசி மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.என்று தெரிவித்தார்.

உதவி இயக்குநர் உமாசங்கர் பேசுகையில் , 15 வது நிதிக்குழுவில் 275.46 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 60 சதவீத நிதி வரையறை செய்யப்பட்டது. 40 சதவிகித நிதி வரையறை செய்யப்படாதது. வரையறை செய்யப்பட்ட 60 சதவிகித நிதியில் மாவட்ட கவுன்சில் மூலம் பரிந்துரைக்கப்படும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். என்று தெரிவித்தார். 

மேலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் , மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு தற்போது இயங்கிவரும் தற்காலிக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கீடு செய்வதுடன் , புதிதாக கட்டப்பட்டு வரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியாக நிரந்தர அலுவலக கட்டிடம் மற்றும் கூட்டரங்கு கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
இந்தக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 2.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திர லீலா , மாரிமுத்து , தேவி , சுதா ராஜா தலைவர், கனிமொழி, பூங்கொடி, சாக்ரடீஸ், முத்துச்சாமி சுப்பிரமணியன் , சுதாமைதீன் பீவி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன்  நன்றி கூறினார். https://www.tnrd.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today