நெல்லை, செப்.27-
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாமில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 3&வது அலை பரவல் அச்சம் உள்ளது. இதனால் 3-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. நெல்லை மாநகர பகுதியில் 100 இடங்கள், கிராம பகுதிகளில் 335 இடங்கள் என மொத்தம் 435 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது. இந்த பணியில் 435 தடுப்பூசி பணியாளர்களும், 111 மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டனர்.
இந்த முகாம்களில் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த முகாம்களுக்கு மொத்தம் 68, 500 டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் மாலை 5 மணி நிலவரப்படி 55 ஆயிரத்து 363 பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 49,585 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 7 லட்சத்து 49 ஆயிரத்து 618 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/