தென்காசி, ஜூன் 5-
மதிமுக பொதுச் செயலாளர்
வைகோவின் மகன்
துரை வைகோ தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங்கை சந்தித்து
மாவட்ட காவல் துறையினருக்கு உதவும் வகையில்
50 ஆயிரம் 3 அடுக்கு முகக் கவசங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி
மாவட்ட மதிமுக செயலாளர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன்,
வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .தி.சதன் திருமலைக்குமார், மதிமுக
நகர செயலாளர்கள் தென்காசி
வெங்கடேஸ்வரன், புளியங்குடி ஜாகிர் உசேன்,
மதிமுக ஒன்றியச் செயலாளர்கள் தென்காசி மேற்கு
வல்லம் மணி, தென்காசி கிழக்கு மாரி செல்வம், மதிமுக தொழிற்சங்க செயலாளர் இலத்தூர் முருகன், இலஞ்சி பேரூர் கா.முருகன், தென்காசி நகர மாணவரணி அமைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே