தென்காசி, ஜூன் 1-

தென்காசியில் வாகனங்களில் நடமாடும் காய்கறி விற்பனை செய்வதைவேளாண்மை துணை இயக்குநர் வேளாண்மை வணிகம் .கிருஷ்ணகுமார்ஆய்வு செய்தார்.
 தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி எஸ் சமீரன்  அறிவுரையின்படி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக உழவர் சந்தை மூலம் தென்காசியில் மூன்று  நடமாடும் உழவர் சந்தை  வாகனங்களில் தென்காசி நகராட்சி பகுதியான வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, சக்தி நகர், கே.ஆர் காலணி, சிவந்தி நகர், அலங்கார் நகர், காளிதாசன் நகர் பகுதிகளிலும் குத்துக்கல்வலசை மற்றும் சுற்றியுள்ளபகுதிகளிலும் மின் நகர் பகுதிகளிலும் காய்கறி மற்றும் பழங்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது.
இத்துடன் வேளாண்மை  விற்பனை மற்றும்  வேளாண் வணிகத்துறை மூலம் உழவர் உற்பத்தியாளர்நிறுவனம் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் இருபது வாகனங்களில் தினமும் காய்கறி பழவகைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
விநியோகம் சீராக நடைபெறுகிறதா? நிர்ணய விலைக்கு விற்பனை நடைபெறுகிறதா? சமூக இடைவெளி ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகிறதா ?முகக்கவசம் அணியப்படுகிறதா? என்பதை தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண்மை துணை இயக்குநர் க.கிருஷ்ணகுமார்  ஆய்வு செய்தார்.
ஆய்வில் தென்காசி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இராமச்சந்திரன்,  சந்தை உதவி நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார் மற்றும் கணேசன்,  தென்காசி வேளாண்மை அலுவலர்   வேளாண் வணிகம்  முகைதீன் பிச்சை, உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே