தென்காசி சூன் ,19- வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும் கல்விக்காகவும் செல்பவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தென்காசியில் நடைபெறுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ்  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள      செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:l தமிழ்நாடு முதலமைச்சர்  கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
கொரானா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்து மக்களின; வாழ்வாதாரங்கள் வளர்ச்சி அடையவேண்டும் என்னும்  முதல்வரின் உத்தரவிற்கிணங்க, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் , ஏற்கனவே கோவிஷுல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு 84 நாட்கள் முடிவடையாமல் இரண்டாவது தவணை தடுப்பூசிக்காக காலவரன்முறை அடிப்படையில் காத்திருக்கின்றார்கள்.
இவர்களில் வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காகவோ, கல்வி கற்பதற்காகவோ அல்லது டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவோ வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருக்கும் நபர்களுக்கான பிரத்தியோகமாக சிறப்பு தடுப்பூசி முகாம் 19.06.2021 முதல் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற இருக்கிறது.
மேலும், வெளிநாட்டு பயணம் மேற்கொள்வோருக்கான பிரத்தியகமான  தடுப்பூசி முகாமிற்கு வருகின்றவர்கள் வெளிநாட்டில் வேலை கிடைக்கப்பெற்ற உத்தரவு, கல்வி பயில அனுமதி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் குழுவை சேர்ந்தவர்கள் எனில், அதற்கான அனுமதி கடிதம் போன்ற ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று மருத்துவ அலுவலர் அவர்களின் ஆலோசனைப்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி பயன்பெற வேண்டுமென      தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.கோபாலசுந்தரராஜ் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

நிருபர் நெல்லை டுடே