தென்காசி, சூன் 12-
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அர்ஜீனா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
விளையாட்டுத் துறையில் நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டுத் தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது.
அவ்வாறே, 2020ம் ஆண்டிற்கான கிழ்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது”, அர்ஜீனா விருது”, “துரோணாச்சார்யா விருது”, “தயான்சந்த் விருது” மற்றும் “ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் புரஸ்கார் விருது” ஆகிய விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க கடைசி நாள்:16.06.2021.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், அண்ணா விளையாட்டு அரங்கம், திருநெல்வேலி 0462-2572632 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். என தென்காசி  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே