தென்காசி ,சூன் .13-வாசுதேவநல்லூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் நாடு அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ், 281 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கத்தை எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக்குமார் வழங்கினார்.
தமிழ் நாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக நிவாரணஉதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு உதவி வழங்ப்பட்டு வருகிறது.
இச்சூழலில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ டாக்டர் சதன் திருமலைக் குமார் கலந்துகொண்டு மொத்தம் 281 பெண்களுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் திருநங்கைகள் 5 பேருக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, வேலம்மாள், பால்ராஜ், அந்தோணி ராஜ்,திமுக ஒன்றிய செயலாளர்கள் வாசு., வடக்கு பொன் முத்தையா பாண்டியன், , தெற்கு பூசைபாண்டியன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளரும் சிவகிரி பேரூர் திமுக செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம்,மாவட்ட வழக்கறிஞர் அணிதுணை அமைப்பாளர் பொன்ராஜ், , மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மாடசாமி, நல்லசிவன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், புளியங்குடி நகர மதிமுக செயலாளர் ஜாகீர் உசேன்,
மதிமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார், வாசு பேரூர் திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கள் மாரிமுத்து, ரூபி.பாலசுப்பிரமணியன், சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முருகன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே