தென்காசி, சூன் 12-
மருந்தகங்களில் மருத்துவர் களின் பெயரைக் கூறி சிகிச்சை அளித்தால் மருந்தக உரிமம் ரத்து செய்யப்படும் என தென்காசி  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தனியார் மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தலைமையில் நடைபெற்றது.

பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்    கடைபிடிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக மருந்தக உரிமையாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் காய்ச்சல் தொடர்பான மருந்துகளை நோயாளிகளிடம் விநியோகிக்கக்கூடாது.காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளின் தகவல்களை சுகாதாரத்துறை அலுவலகங் களில் தெரிவிக்க வேண்டும்.

மருந்து வாங்க வரும் நோயாளிகளின் காய்ச்சல் அறிகுறி ஏதேனும் தென்பட்டால் ஆக்ஸிஜன் அளவை அறிந்து கொள்ளும் வகையில் பல்ஸ் ஆக்ஸியோ கருவியினை இலவசமாக வைத்து ஆக்ஸிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும்.
காய்ச்சல் தொடர்பான மருந்துகளை நோயாளிகளிடம் வழங்கும் தகவல்களை சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தினந்தோறும் தகவல்களை பதிவிட வேண்டும்.
மருந்தகங்களில் மருத்துவர் களின் பெயர்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கக்கூடாது. யாரேனும் மருந்தகங்களில் மருத்துவர் களின் பெயரை குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப் படுவது தெரியவந்தால் மருந்தகங்களின் உரிமை ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மருந்தகங்கள் கொரோனா போன்ற பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தெரிவித்தார்.

பின்னர் ஐசிஐசிஐ வங்கி அமைப்பின் சார்பில் ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் மண்டல மேலாளர்கள் இம்தியாஸ் முகமது, ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.அருணா, மருந்து ஆய்வாளர் ராமச்சந்திரன், மருந்தகங்களின் சங்கத்தலைவர் மற்றும் உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே