.
தென்காசி, ஜூன் 3-
கொரோனா தொற்றால் இறந்த புளியங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் உடல் அவரது சொந்த ஊரான சாத்தூரில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டத்தில் கடந்த 14.09.2020 முதல் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுவாமிநாதன் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று  காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவரது உடல் அவரின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், தென்காசி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், சாத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர். ராமகிருஷ்ணன்,  எஸ்பிசிஐடி டி.எஸ்பி., குப்புசாமிஇ தென்காசி மற்றும் விருதுநகர் மாவடட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 1997ம் வருடம் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்த  சுவாமிநாதன் கடந்த 2020ம் வருடம் துணைக் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். சுவாமிநாதனுக்கு யமுனா என்ற மனைவியும், சகானா  (13)இ சதானா  (12) மற்றும் சந்தோஷ்  (9) ஆகிய குழந்தைகளும் அவரது சொந்த ஊரான சாத்தூரில் வசித்து வருகின்றனர்.

படவிளக்கம்:
தென்காசி மாவட்டம் புளிங்குடி டிஎஸ்பி சுவாமிநாதன் கொரோனாவால் இறந்ததை அடுத்து அவரது சொந்த ஊரான சாத்தூரில் காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

நிருபர் நெல்லை டுடே