தென்காசி, சூன் 20-தென்காசி மாவட்டத்தில் 34 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறிப்பிட்ட சில பகுதிகள் பிரச்சினைக்குரிய பகுதி என அழைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையை மாற்றும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் புது முயற்சியாக அந்தந்த காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் பிரச்சினைக்குரிய பகுதிகளில் நடந்தே ரோந்து சென்று அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், பிரச்சினைக்குரிய நபர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு அவர்கள் காவல் துறையால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுவர்.
மேலும் இவ்வாறு நடந்தே ரோந்தில் ஈடுபடுவது அப்பகுதியிலுள்ள சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட நினைக்கும் நபர்களை எச்சரிக்கும் விதமாகவும், அப்பகுதியை பிரச்சினைக்குரிய பகுதியிலிருந்து மாற்றியமைக்கும் விதமாகவும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், நாம் தென்காசி மாவட்டத்தில் இனி பிரச்சினைக்குரிய பகுதி என்ற நிலை இல்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவும் மாவட்டமாக மாற்றப்படும் என்று கூறினார்.
நிருபர் நெல்லை டுடே