தென்காசி, சூன் 21-
பாவூர்சத்திரம் அருகே செட்டியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஒன்றிய அரசு தொடர்ந்து தினசரி  உயர்த்தி வரும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைத்திட வேண்டும். பொதுமக்களை மோசமாக பாதிக்கும் பெட்ரோலிய பொருட்கள் மீதான அநியாய வரியை ரத்து செய்து ஜிஎஸ்டி க்குள் கொண்டு வர வேண்டும். 
அனைத்து ஏழை, எளிய குடும்பங்களுக்கும் கொரோன காலத்தில்  மாதம் ரூ7500 மற்றும் தலா 10 கிலோ உணவு பொருட்கள் வேண்டும்.விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்திட வேண்டும்.
கொரோனா தடுப்பூசி தட்டுபாடின்றி விரைந்து வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன போராட்டம் நடைபெற்றது.   கிளைசெயலாளர்  அண்ணாத்துரை தலைமை வகித்தார்.
 இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, அய்யாத்துரை, கலா.  கிளைசெயலாளர் முருகேசன், சண்முகம் , சின்னதாய், மாரியப்பன், லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிருபர் நெல்லை டுடே