தென்காசி,  ஜூன்  4-பாளையங்கோட்டை சிறைகைதி கொலை வழக்கு தொடர்பாக ஜெயிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ (வயது 27). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தது. இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி சிறையில் வைத்து முத்துமனோவுக்கும், மற்ற கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முத்து மனோ அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக துணை ஜெயிலர், 3 உதவி ஜெயிலர்கள், ஒரு ஏட்டு, ஒரு காவலர் ஆகிய 6 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 
இந்த நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறை ஜெயிலர் சண்முகசுந்தரத்தை நேற்று பணியிடை நீக்கம் செய்து  சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார்சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே