நெல்லை, செப்.18- நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகம் முன்பு  இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணைச்செயலாளர் ஜாய்சன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர் சத்யா, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி மரியசெல்வம், நெல்லை மாவட்ட துணை தலைவர் சஞ்சய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/