தென்காசி, சூன் 19-
வாசுதேவநல்லூர்
நடைபயண பூங்காவினை
சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
வாசுதேவநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தின் தெற்கு பகுதியில் 2013-2014ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நடைபயண பூங்காவினை பார்வையிட்டேன்.அது மிகவும் சிதிலமடைந்து குப்பைகளை கொட்டி அந்த இடம் அசுத்தமாக காணப்பட்டது.
உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக சீரமைக்க சொன்னேன். அரசுஅதிகாரிகள் உடனடியாக வந்து அப்பூங்காவினை சுத்தம் செய்வதற்காக ஜெசிபி வாகனத்தினை கொண்டு வந்து சீரமைத்து வருகின்றார்கள்.
அதற்கான பணிகளை முழுவீச்சில் செயல் பட வைத்து அப்பூங்கா விரைவில் புது பொலிவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்து கொள்கிறேன் .
இவ்வாறு டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ கூறினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அலுவலர் சுதா, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, பேரூராட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார்,திமுக பேரூர் செயலாளர் சரவணன், மதிமுக புளியங்குடி நகர செயலாளர் ஜாகீர் உசேன், பத்திரம் சாகுல்ஹீமீது, மதிமுக நிர்வாகிகள் கணேசன், குழந்தைராஜ், மாரிச்சாமி, மெடிக்கல் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே