தென்காசி, ஜூன் 1-
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்மேற்கு பருவ மழை விரைவில் துவங்க இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணிகள் மற்றும் உங்கள் பகுதியில் முதல்வர் செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்து தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். புணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் செயல் திட்டங்கள்  செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே