தென்காசிி, சூன் 14- தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர் ஜி எஸ் சமீரன் நேற்று கோவைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 45 ஐஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கோவை மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக டாக்டர் ஜெ. யூ சந்திரகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் இவர் 2013ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 
 இவர் ஏற்கனவே திருப்பத்தூரில் உதவி கலெக்டராக பணிபுரிந்துள்ளார், மேலும்  மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த டாக்டர் ஜெ.யூ. சந்திரகலா தென்காசி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா தென்காசி மாவட்டத்தின் மூன்றாவது கலெக்டர் மட்டுமன்றி, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டரும் இவர்தான்.மேலும் தென்காசி புதிய கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கலெக்டராக பணிபுரிந்து வரும் டாக்டர் கே.செந்தில்ராஜன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

நிருபர் நெல்லை டுடே