தென்காசி, சூன் 17-
தென்காசி புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ்.கோபால சுந்தரராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக கடந்த 7 மாதங்களாக பணிபுரிந்து வந்த டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக ஜெ.யூ.சந்திரகலா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச்செயலாளர் இறை அன்பு அறிவித்தார்.
அதன்படி அதன்படி டாக்டர் ஜெ.யூ.சந்திரகலா தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்று கொள்ளாத நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஜெ.யூ. சந்திரகலா இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தென்காசி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக எஸ்.கோபால சுந்தர்ராஜ் நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று எஸ்.கோபால சுந்தர்ராஜ் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர்
எஸ்.கோபால சுந்தர்ராஜ்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மயில்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேல் – ராஜம்மாள் தம்பதியின் மகன் ஆவார்.
இவர் ஆரம்ப கல்வியை இராமநாதபுரம் மற்றும் சந்திரகுடி அருகே மென்னந்தி கிராமத்திலும் நடுநிலை கல்வியை சந்திரக்குடி அருகே மென்னந்தி கிராமத்திலும், நடுநிலைக் கல்வியை மாவிலா தோப்பிலும், உயர்க்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் பள்ளியிலும் முடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பி.எஸ்.சி (விவசாயம் இளங்கலை) கல்வியை கோவை வேளாண் கல்லூரியிலும் முதுகலை விவசாயத்தை டெல்லி பல்கலைக் கழகத்திலும் முடித்துள்ளார்.
இவர் 2012ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 5 வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிருபர் நெல்லை டுடே