தென்காசி,  ஜூன்  10-தென்காசி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மெசானிக் சேவை அமைப்பின் சார்பில் ரூ. 6 இலட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டி கருவிகள், முகக்கவசம் மற்றும் கையுறைகளை அமைப்பின் தலைவர் .ஐ.ஏ.சிதம்பரம்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரனிடம் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்ததாவது:-
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  மெசானிக் சேவை அமைப்பின் திருநெல்வேலி மற்றும் தென்காசி கிளைகளின் சார்பில் .6 இலட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்ஸிஜன் செறிவூரூட்டிகள், 50 ஆயிரம் முகக்கவசங்கள் மற்றும் 500 கையுறைகளை ஆரம்ப சுகாதார  மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் மருத்துவ உபகரணங்களை அமைப்பின் தலைவர்; வழங்கினார் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.நெடுமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளர்; மரு.ஜெஸ்லின், அமைப்பின் தலைவர்  கோபி குமார், செயலாளர் ரமணி, உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே