தென்காசி, ஜூன் 6-
 தென்காசி மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு 11 பேர் பலியாகினர் .
தென்காசி மாவட்டத்தில் நேற்று 291 பேர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது .
மாவட்டத்தில் நேற்று 11பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது .
491 பேர் பூரணமாக குணமாகி மருத்துவமனைகளில் இருந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனால் குணமாகியோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது .

நிருபர் நெல்லை டுடே