தென்காசி, ஜூன் 5-
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்காசி, செங்கோட்டை மரஆலை அதிபர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் எம்.ஆர்.அழகராஜா, தேவ்ஜி என் பட்டேல் ஆகியோர் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் முகக்கவசம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்கள்.
அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவிக்கையில்:-
தென்காசி, செங்கோட்டை மரஆலை அதிபர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பாக எம்.ஆர்.அழகராஜா, தேவ்ஜி என் பட்டேல் ஆகியோர் பொது சுகாதார பணியாளர்களுக்கு 50 ஆயிரம் முகக்கவசங்களையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 50 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் வழங்கினார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) மாரியம்மாள், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.யோகானந்த், அரசு அலுவலர்கள் மற்றும் மர ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் .
நிருபர் நெல்லை டுடே