தென்காசி,  சூன் 23-

தென்காசி மாவட்ட  அரசு மருத்துவமனை நோயாளிகளின் நலன்கருதி செங்கோட்டை மர ஆலை உரிமையாளர் சங்கத்தின் சார்பில், ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான பேட்டரி கார் வழங்கப்பட்டது.

 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு  மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின் தலைமை தாங்கினார். தென்காசி, செங்கோட்டை மர வியாபாரிகள் சங்க செயலாளர் அழகர்ராஜா, தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 
தென்காசி செங்கோட்டை மர வியாபாரிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி காரின்  சேவையை தென்காசி  மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மாரியம்மாள் ,தென்காசி செங்கோட்டை மரவியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் வெங்கடேஷ் ராஜா, ரஹீம், ஃபரூக், பிரவீன் பட்டேல், சந்து பட்டேல், சுபாஷ் பட்டேல், பிரபு, மு‌ன்னா‌ள் ரோட்டரி கவர்னர் கே.ராஜகோபால் , தென்காசி மீரான்  மருத்துவமனை  டாக்டர் அப்துல் அஜீஸ் , குற்றாலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள்  செந்தில், பிரகாஷ் மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்  கீதா , மருத்துவர் மல்லிகா ,செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, வசந்தி மற்றும் மருத்துவமனை  அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே