தென்காசி, ஜூன் 4-

தென்காசி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  வனத்துறை சார்பில்  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  துவக்கி வைத்தார்.
வனத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி  பிறந்தநாளையொட்டி முதற்கட்டமாக 11 மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்து, பின்னர் ரூ.119 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட  ஆட்சியர்  அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் , உதவி வன பாதுகாவலர் பிரின்ஸ் குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை நா.சரவணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) பிரேமலதா, 
வனச்சரக அலுவலர்கள் செந்தில் குமார், பாண்டியராஜன், பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே