தென்காசி, மே  29-தென்காசியில் தமுமுக மற்றும்  தாஃவா சென்டர் சார்பாக கொரோனா பேரிடர் மீட்பு மையம்  அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது. பழனி நாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
இத்த பேரிடர் மையத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆக்ஸிஜன் சேவை,  பல்ஸ் கண்டறிதல், கபசுர குடீநீர் வழங்குதல், முகக்கவசம் வழங்குதல், கொரோனா தடுப்பூசி முன்பதிவு, ஆம்புலன்ஸ் சேவை, ஹோமியோபதி மாத்திரைகள் வைட்டமின் மாத்திரை, மனநல ஆலோசனைகள், மருத்துவமனை தகவல், அரசு காப்பீடு திட்ட தகவல் கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்தல், மருத்துவர் ஆலோசனைகள் ஆகியவை பேரிடர் மையத்தில் செயல்படுகிறது.
இதன் திறப்பு விழாவிற்கு தமுமுக மாவட்ட தலைவர் முன்னாள் கவுன்சிலர் எம்.சலீம்  தலைமை தாங்கினார்.தென்காசி தாஃவா சென்டர் தலைவர் முத்தலிபு, செயலாளர் ஹக்கீம், நியாஸ்,  தமுமுக மாவட்ட செயலாளர் கொலம்பஸ் மீரான், மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப், மாவட்ட துணைசெயலாளர் திவான்ஒலி, தமுமுக ஐபிபி மாவட்ட பொறுப்பாளர்கள் மசூதுஅலி, பொதிகை மைதீன், கோதரி மசூது, நகர தலைவர் அபாபீல் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரிடர் மையத்தைதென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் துவங்கி வைத்து தமுமுக வின் சேவைகளை பாராட்டி 50, கொரனோ பாதுகாப்பு கவச உடை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் தென்காசி கே.பி மருத்துவமனை மருத்துவர் சங்கரகுமார் , செங்கோட்டை சாந்தி நிகேதன் மருத்துவமனை மருத்துவர் கிருஷ்ணகுமார்,  ஆகியோர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
தென்காசி நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, தென்காசி தாசில்தார் சுப்பையன் கொரோனா சென்டரை பார்வையிட்டு சேவைகளை பாராட்டினர்.
மேலும் தமுமுக மாநில செயலாளர் நயினார் முகம்மது, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் காஜா, தொண்டரணி மாநில செயலாளர் கோகோ அலி, ஊடகபிரிவு மாநில செயலாளர் ஆதம்பின் ஆஷிக், ஊடகபிரிவு மாவட்ட செயலாளர் வீராணம் முத்தலிபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக  மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகம்மது காமில்  நன்றி கூறினார்.

நிருபர் நெல்லை டுடே