தென்காசி,  மே 31-
சுகாதாரத்துறை தென்காசி நகராட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ சேவை அணி இணைந்து நடத்திய கொரோனாதடுப்பூசி முகாம்  தென்காசி மதரஸா வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் முகம்மது யாக்கூப் ஆலோசனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அப்துல் ரசாக் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கலஞ்சியம் பீர், நகர பொருளாளர் சாகுல் ஹமீது, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜாபர் உசேன், ஒன்றிய செயலாளர் மஜீத் மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் சாதிக், ஒன்றிய முன்னாள் செயலாளர் வாப்பா சேட், வணிகர் அணி மாவட்ட பொருளாளர் பீர்முகம்மது, வணிகர் அணி மாவட்ட செயலாளர் போரிங் பாஷா, துணைச் செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முகாமை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார்,  திமுக நிர்வாகி காளிதாஸ்   ஆகியோர துவக்கி வைத்தனர்.  மாநில செயலாளர் மைதீன் சேட்கான்  கலந்துகொண்டு முதல் தடுப்பூசி போட்டுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
 முகாமில் ஆர் டி ஓ முருகேசன்,மருத்துவர் முகம்மது இப்ராகிம்,   தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான் ,  டாக்டர் சங்கரகுமார் ,ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் டாக்டர் ஜுன்னத்துல் பிர்தௌஸ், தமுமுக மாவட்ட செயலாளர் அகமது ஷா, மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், ஐக்கிய ஜமாத் தலைவர்  இஸ்மாயில்,  பாபாக்கி தங்கள் மதரசா தலைவர் மன்சூர்மஸ்ஜிதுர் ரஹ்மான், ஜமாத் செயலாளர் நாகூர்மீரான்,
 தமுமுக முன்னாள் மாவட்ட பொருளாளர் முகமது பிலால்,  திமுக இளைஞரணி செயலாளர் ரஹிம், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் காதர், திமுக மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.