தென்காசி, மே 29-
தென்காசி மாவட்டம் சுரண்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வரின்  ஆணைக்கிணங்க சுகாதார துறை  சார்பில் தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டை இந்து நாடார் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பு ஊசி  போடும் முகாம் நடைபெற்றது.

இந்த தடுப்பூசி முகாமினை தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார்  தொடங்கி வைத்தார். இந்த  முகாமில் அரசு மருத்துவர் ராஜ்குமார், பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கடகோபு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி அருணா,  காங்கிரஸ் தெய்வேந்திரன் எஸ்.வி.எஸ்.பிரபாகர்,  ஐ.ஒ.பி.வணிக தொடர்பாளர்கள் மா.ஜெயக்குமார் மு.பிரேம்குமார் , திமுக வர்த்தக அணி நிர்வாகி சுரண்டை மா.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட திமுக வர்த்தக அணி சார்பில் சுரண்டை மா.முத்துக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இலவச கொரோனா தடுப்பூசி முகாமில் 215 நபர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது.

நிருபர் நெல்லை டுடே