தென்காசி, சூன் 9-

தென்காசி மாவட்டம்
செங்கோட்டை நகராட்சி பணியாளா்களுக்கு கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி குட்டியப்பா, நகராட்சி ஆணையாளர் நித்தியாவிடம் 5 ஆயிரம் முககவசங்களை வழங்கினார்.

மேலும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகளை சீரான முறையில் நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கடேஸ்வரன், சுகாதார மேற்பார்வையாளா் முத்துமாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா். 

நிருபர் நெல்லை டுடே