தென்காசி, ஜுன்  6-
சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக அளவில்
 மரக்கன்றுகள் நட வேண்டும்  என தென்காசி மாவட்ட திட்ட அலுவலர்  கூறினார்.தென்காசி ஊராட்சி ஒன்றியம் கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வெ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அ.கிரேட் சர்ச்சில ஜெபராஜ் முன்னிலை வகித்தார். 
 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசும்போது, 
அப்போது உலகச்சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டால் தான் மனித இனம் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ முடியும்.
எனவே தென்காசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மிக அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு அவைகளை தொடர்ந்து பராமரிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
அதனைத் தொடர்ந்து கணக்கப்பிள்ளை வலசை ஊராட்சி  சேவை மையம் கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரவணன்  பல்வேறு மரக்கன்றுகளை நட்டார். 
இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவண சண்முகம்,  ஊராட்சி செயலர் கே.வேம்பையா,  மகளிர் சுய உதவிக்குழு பே.காளியம்மாள்,  பணித்தள பொறுப்பாளர் ரா.ரேவதி மற்றும் ப.திருமலை குமார் கலந்துகொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே