தென்காசி,  சூன் 21-சிவகிரி அருகே மான் வேட்டைக்கு சென்ற 3 பேருக்கு வனத்துறையினர் ரூபாய் 75 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
தென்காசி மாவட்டம் சிவகிரி வடக்குப்பிரிவு, தேவிப்பட்டிணம் பீட் பகுதியில் மான் வேட்டைக்கு சென்றனர்.  இதுகுறித்து வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து சிவகிரி ரேஞ்சர் டி.சுரேஷ் தலைமையில், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் மகேந்திரன், தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார், வனக்காப்பாளர்கள் திருவேட்;டை, ராஜீ, சுதாகர், இமானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலர் அருண்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனந்தன், சரவணன், மாரியப்பன், பாலசுப்பிர மணியன் ஆகியோர் தனித்தனிக்குழுவினராகச் சென்று தேடினர்.

தேவியாறு பீட் பகுதியில் மான்களை 3பேர் வேட்டையாட முயற்சி செய்து கொண்டிருந்தனர் . அப்போது அவர்களை வனத் துறையினர் மடக்கிப்பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் தேவிபட்டணதெதைச் சேர்ந்த தங்கவேலு மகன் பத்மநாபன் என்ற போஸ் (வயது 46),  சேத்தூரைச் சேர்ந்த நீராத்துலிங்கம்    மகன் சிங்க ராஜூ ( 55),  ராமையா மகன் அழகுமலை (70)என தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவருக்கும் தலா ரூபாய் 25 ஆயிரம்  வீதம் மொத்தம்ரூபாய் 75 ஆயிரம்
அபராதம் விதித்தனர்.

நிருபர் நெல்லை டுடே