தென்காசி, ஜூன் 2-

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் ஆக்ஸிஜன் செறிவூட்டியினை சுகாதாரத்துறை அலுவலரிடம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம். குமார் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தெரிவிக்கையில்:-
 தமிழ்நாடு முதலமைச்சர்  கொரோனா தடுப்பு பணிக்காக பல்வேறு கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதற்கு காரணம்  தமிழ்நாடு முதலமைச்சர்  தளர்வுகளற்ற ஊரடங்கை முழுமையாக அமுல்படுத்தியதை தொடர்ந்து பொது மக்களாகிய நீங்கள் ஊராடங்கை முழுமையாக கடைபிடித்து ஒத்துழைப்பு அளித்ததுதான். 
சுகாதாரத்துறை அமைச்சர்  கொரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து நமது மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்டபோது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்திடவும், கொரோனா சிகிச்சை மேற்கொள்ள புதியதாக 5 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் மையத்தினை நிறுவுவதற்கும், மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பயன்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தேவையுள்ளது என கோரிக்கை வைத்தார். 
அதனடிப்படையில்  தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிற் கிணங்க சென்னை மாநகராட்சியில் இருந்து முதற்கட்டமாக 10 ஆக்ஸிஜன்  செறிவூட்டிகள் வழங்கப் பட்டுள்ளது.
மேலும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் 30 படுக்கை உள்ளதை 53 படுக்கைகளாக உயர்த்தி ஒரே நேரத்தில் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் நெட்டூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவருக்கு 50% நுரையிரலில் தொற்று இருப்பதை தெரியவந்தது. பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் பூரண குணமடைந்து தற்பொழுது நலம் அடைந்துள்ளார். 
இவ்வாறு மருத்துவர்கள், செவிலியர்க்ள் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.
 ஆகையால் பொதுமக்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கூட்டு முயற்சியுடன் கள பணியாற்றினால் நமது மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்  தெரிவித்தார்.
பின்னர் சங்கரன்கோவில் காந்திநகரில் கொரோனா சிறப்பு முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர்  மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்  பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் (சங்கரன்கோவில்) இ.ராஜா, (வாசுதேவநல்லூர்) மரு.டி.சதன்திருமலைக்குமார், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.யோகானந்த், சங்கரன்கோவில் முதுநிலை மருத்துவ அலுவலர் மரு.செந்தில்குமார், சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, 
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Attachments area

நிருபர் நெல்லை டுடே