தென்காசி, சூலை 25:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்; உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 154 நபர்களுக்கு ரூ.6.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; வழங்கினார்:
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோகுல் திருமணமஹாலில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 154 பயனாளிகளுக்கு ரூ.6.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது:
தமிழக முதல்வர் பரப்புரையின் போது பெறப்பட்ட மனுக்களின் மீது உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளிலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இன்று 154 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்” என்ற தமிழக அரசின் உயரிய நோக்கத்திற்கிணங்க, பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் ஆகியோரின் சமுக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்லாது ஊராட்சி, நகராட்சி பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இலவச வீ ட்டு; மனை வசதிகளையும், வருவாய்துறை முலம் இலவச விட்டுமனை பட்டாவும் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டும்.
மேலும், கொரோனா 3-ம் அலை பரவ வாய்ப்புள்ள இச்சூழ்நிலையில் 18 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டும், பொதுமக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறையின் சார்பில் 36 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.36000- மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 27 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.27000- மதிப்பீட்டில் விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.4000- மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2000- மதிப்பீட்டில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2000- மதிப்பீட்டில் முதிர்கன்னிகள் உதவித்தொகைக்கான ஆணைகளையும், மேலும் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 வீதம் ரூ.67,500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளையும் மற்றும் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.1,80,000- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 7 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதம்; ரூ.70,000- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும் மற்றும் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 வீதம் ரூ.64,000- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும், 19 பயனாளிகளுக்கு தலா ரூ.1660 வீதம் ரூ.31,540- மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும்,
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையினர் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,865 வீதம் ரூ.11730- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரமும், 5 பயனாளிகளுக்கு தலா ; ரூ.5070 வீதம் ரூ.24,350- மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டியும்,
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளையும், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.64554 மதிப்பீட்டில் தெளிப்பான் கருவிகளையும், அட்மா திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.10,000 மதிப்பீட்டிலான கருவிகளையும்,
தோட்;ட கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,200 வீதம் ரூ.26,400 மதிப்பீலான எலுமிச்சை பரப்பு விரிவாக்கமும் ஆகமொத்தம் 154 பயனாளிகளுக்கு ரூ.6,21,074 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) , சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜமனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, வட்டாட்சியர்கள் ராம்குமார் (சங்கரன்கோவில்), கண்ணன் (திருவேங்கடம்) உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே