தென்காசி, ஜூன் 1-

பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் கொரோனாவுக்கு பெண் உள்படஇருவர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி வன்னியசுந்தரபுரத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், திப்-மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 65 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இருவரது உடல்களும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்யப்பட்டது.
ஏற்கனவே தி;ப்பணம்பட்டியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், சுகாதார பணிகள் மேற்கொள்வதில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி பொதுமக்கள் தென்காசி எம்.பி. தனுஷ்குமாரிடம் புகார் தெரிவித்த நிலையில், தற்போது திப்பணம்பட்;டியில் இருவர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களிடயே கடும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிருபர் நெல்லை டுடே