குழந்தைகள்,பெண்கள் , முதியவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு   கடும் நடவடிக்கை :தென்காசி எஸ்பி எச்சரிக்கை
 தென்காசி, ஜூன்  8-
குழந்தைகள்,பெண்கள் , முதியவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு   கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். கிருஷ்ணராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
தென்காசி மாவட்டத்தில் முதல் காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்  பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக ஆர்.கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டார். 
அவர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  வந்துபதவி ஏற்றுக்கொண்டார். 
 காவல்கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் 2013 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் தேவகோட்டை உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர் காவல் துறையில் சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகவும், திருவல்லிக்கேணி மற்றும் மாதாவரத்தில் காவல் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.
 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ்  பேசுகையில், மக்களின்  குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் செயப்படும் 9385678039 என்ற தொடர்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் நேரடியாக காவல் நிலையம் செல்ல முடியாமல் இருப்பதால் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களின் புகாரினை தெரிவித்தால் மக்களை நோக்கி தென்காசி மாவட்ட காவல்துறை என்ற திட்டத்தின் மூலம் காவல்துறையினர் புகார் தெருவித்தவரின் இருப்பிடத்திற்கே வந்து புகார் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு வழங்குவர்.
 குழந்தைகள்,பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களுக்கு உடனடியாக செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .

நிருபர் நெல்லை டுடே