தென்காசி, சூன் 18 -குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்   கோபால சுந்தரராஜ் தெரிவித்தார் .
இதுகுறித்து அவர் தென்காசியில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது :

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து துறைகளிலும் அரசின் திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படும். 
 அனைத்து துறைகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். குற்றாலத்தில் அரசின் தளர்வு உத்தரவைப் பொறுத்து தான் குளிப்பதற்கு அனுமதிக்கப்படும்.தற்போது அனுமதி இல்லை. 
இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர் நெல்லை டுடே