தென்காசி, ஜூன் 1 –
கடையநல்லூர் அருகே
வீட்டில் சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்  உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த கடையநல்லூர் காவல் துறையினர்  தனது உறவினர் வீட்டில் வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சிய மேலக்கடையநல்லூர் வேத கோவில் வடக்கு தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சந்திரன் (36)   மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  
மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கடையநல்லூரை சேர்ந்த கனி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நிருபர் நெல்லை டுடே