தென்காசி, சூன் 22-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் வீர, தீரச்செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2021ம் ஆண்டிற்கான வீர, தீரச் செயல்கள் மற்றும் சாகசங்கள் புரிந்த பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் சுயவிபரம், புகைப்படம், பத்திரிக்கைச் செய்தி, சான்றிதழ்கள் மற்றும் வீர, தீர சாதனைகள் பற்றிய விவரங்களை ஆகியவற்றை 3 ஸ்பைரல் பைண்டிங் நகல்களாக தயார்செய்து, பாளையங்கோட்டை, செயின்ட் தாமஸ் ரோட்டில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும், ச.ராஜேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம் திருநேல்வேலி என்ற முகவரியில் நேரிலோ தபாலிலோ 24.06.2021 அன்று மாலை 5.00 மணிக்கு முன்னதாக அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும் தகவலுக்காக 0462-2572632 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும்.
மேற்கண்ட தகவலை தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ச.ராஜேஷ் தெரிவித்தார்.
நிருபர் நெல்லை டுடே